நேற்று அவள் இருந்தாள் அவளோடு நானும் இருந்தேன் ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது
நேற்று எந்தன் மூச்சினில் உன் காதல் அல்லால் காற்று இல்லையே நேற்று எந்தன் ஏட்டில் சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே நேற்று எந்தன் கை வளையல் இசைத்ததெல்லாம் உன் இசையே வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா
நேற்று நீ இருந்தாய் உன்னோடு நானும் இருந்தேன் இருந்தாய்... இருந்தோம்...
ஆகாயத்தில் நூறு நிலாக்களும் அங்கங்கே நீலப்புறாக்களும் பறந்தன அலையெல்லாம் நீ எங்கே எங்கே என்றது கரை வந்து அலை அங்கே ஏங்கி நின்றது
ஒத்த மரமா எத்தனை காலம் சோனாப்பரியா கடலுல போன கட்டு மரமெல்லாம் கரைதான் ஏறிடுச்சே ஆமா அத்தை மவனோ மாமன் மவனோ சோனாப்பரியா இவனைப் போல கடலின் ஆழம் எவனும் கண்டதில்ல தானே நெஞ்சுக்குள்ள நிக்கறியே சோனாப்பரியா மீனு முள்ளா சிக்குறியே சோனாப்பரியா கெஞ்சும்படி வைக்குறியே சோனாப்பரியா
ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்டு வித்தையைக் காட்டும் கோமாளி நான் (2)
கொம்பன் சுரா ..
நான் ஒத்தையில பாடுறேனே தன்னால இந்த பாலைவனப் பாறைகளின் முன்னால வெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே புலம்பும் என் உயிரே உயிரே நான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக இப்ப ஊனமாக சுத்துறனே அடியே என் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல தவிச்சேன் பனிமலரே பனிமலரே
Anjaathe thunjaadhe Ini endrum illai vedhanai Pudhidhaai pirappaai Vazhi engum un mun poomazhai Ennaalum un kaadhal Idhu vaazhum sathiyamae Tholaiyathe.. Entha irulilum maraiyaathe
ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வண்ணம் கரைந்தாலும் வான் வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உள் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே
நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை
இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதி தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே
நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை
அஞ்சாதே துஞ்சாதே இனியென்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன் முன் பூமழை எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே
நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு நெஞ்சே எழு காதல் என்றும் அழிவதில்லை
Nee en kanna pola irukkanum En pillaikku thagappan aavanum Andha alaiyoram namma pasanga konji vilaiyaadanum Nee sonthamaaga kidaikkanum Nee sonnathellaam nadakkanum Namma ulagam onnu indru nam uruvaakkanum
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் பேச கூட தொடங்கலையே நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே இப்போ என்ன விட்டு போகாத என்ன விட்டு போகாத இன்னும் பேச கூட தொடங்கலையே நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் நிறைவேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயே நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல வந்து உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம் உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்
இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே
கடல் மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நிறையுமா இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே இந்த இரவெல்லாம் நீ பேசு தலையாட்டி நான் ரசிப்பேன்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்த தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஒண்ணு இன்று நாம் உருவாக்கணும்